என்னை அறிந்திராத நண்பர்களுக்கு ஒரு தகவல் : என் பிள்ளைப்பருவம் முழுவதும் நான் ஒரு நாடோடி! வங்கிப்பணியில் இருந்த என் தந்தை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பொட்டி கட்டியதன் விளைவு என் நாடோடி வாழ்க்கை!
அதனால் சென்னை வாசிகளுக்கு வாய்த்த நாடக அனுபவங்கள் எனக்கு இல்லை. ஆனால் அதை பற்றிய கட்டுரைகளை / விமர்சனங்களை ஆனந்தவிகடன், கலைமகள் மற்றும் கல்கியில் வாசித்து ஒரு மாதிரி புரிந்து வைத்திருந்தேன்.
எனது ஏழாம் வகுப்பு கல்வி, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் என்கிற கிராமத்தில் துவங்கியபோது தான் நாடகம் என் வாழ்வில் வந்தது.
அந்த ஊரின் கிராம தெய்வமான அறச்சாலை அம்மனின் திருவிழாவின்போது பதினான்கு நாட்கள் நடைபெறும் திருவிழா தான் அந்த ஊரின் கலை தாகம் தீர்க்கும் காவிரி!
அதில் ஆர்கெஸ்ட்ரா, ஓரியண்டல் டேன்ஸ் (கிராமத்தில் நடக்கும் கேபரே டேன்ஸ்) பொய்க்கால் குதிரை, நையாண்டிமேளம், ஓட்டக்கூத்து போக பெரும்பாலும் ஒன்பது நாடகங்கள் இடம்பெறும்...அதில் ஏழு நாடகங்கள் அமெச்சூர் குழுக்கள் நடத்தும்...இரண்டு மட்டும் "பிரபல திரைப்பட நடிகர்" தங்கள் குழுக்களுடன் வந்து நடத்துவார்கள்! (எஸ்.வி.ராமதாஸ் போன்றோர்).
ஆனால் இதன் கதை, வசனம் எழுதும் பணி சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்...
பெரும்பாலும் இதை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மலேரியா இன்ஸ்பெக்டர் மற்றும் சில வேலை இல்லா இளைஞர்கள் நடத்துவார்கள்!
எனது வகுப்பாசிரியர் திரு. தாமஸ் அவர்கள் எழுதும் கதையை / பாடலை அவருக்கு தெரியாமல் படித்து ரசித்ததுண்டு... (அரச்சலூரு அம்மன் தேரு... நாடகத்துலே பார்த்தேன் உன்னை நாடகத்துலே பார்த்தேன் பாடல் இன்னும் என் நினைவில் உள்ளது).
அந்த கலைஞர்கள் படாத பாடு பட்டு ஒத்திகை செய்வதும்...அந்த நாடகத்தை நடத்துவதும் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும்...
பின்னாளில் என் கல்லூரி வாழ்க்கை கோவைக்கு வந்தபோது ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலை அரங்கில் நடைபெறும் சில நாடகங்களை பார்த்திருக்கிறேன்...(அப்போதும் டிக்கெட் போடாத அமெச்சூர் நாடகங்கள் மட்டும் தான்)
ஆனால் இந்த கலைஞர்களின் திறமை பெரிதாக அங்கீகரிக்கப்பட்டதே இல்லை. இதன் காரணம் இவர்கள் சென்னைப்பட்டணத்தில் இல்லாததே என்பது என் கருத்து.
தலைநகர் கலைஞர்களின் திறமையை விட கூடுதலாக இவர்களில் சிலர் பெற்றிருந்தாலும் வெளிச்சம் இவர்கள் மேல் படாத ஒரே காரணத்தால் இவர்கள் வெளி உலகிற்கு அழைத்துவரப்படவில்லை.
ஆனால் என் வியப்பெல்லாம் "நகரம்" என நான் வியந்து பார்த்த கோவையில் வாழ்ந்த கலைஞர்களுக்கே இந்த கதி என்பதை தான்! (ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் சென்னைக்கு சென்ற பின்னரே கவனிக்கப்பட்டனர்).
அவ்வாறு நான் வியந்த, ரசித்த இரு கலைஞர்களை நேற்று பார்த்தேன். அதுவும் நாடக மேடையில்! இரவு முழுவதும் அவர்களின் நினைவுகள்... தூங்கவே முடியவில்லை.
ஒருவர் திரு. பஞ்சம் மணியன் அவர்கள் !
இந்த படத்தின் இடது ஓரமாக பேன்ட், ஷர்ட்டில் இருக்கிறாரே அவர் தான் திரு.பஞ்சம் மணியன்.நல்ல கதாசிரியர், நல்ல வசனகர்த்தா அதிலும் மிகச்சிறந்த மனிதர்!
இவர் எத்தனயோ கஷ்டப்பட்டாலும் நாடகத்தை விட்டதில்லை. இவரின் கஷ்டகாலத்தில் தான் எனக்கு இவரின் அறிமுகம் கிடைத்தது! "பஞ்சம்" என்கிற பட்டப்பெயரை சொல்லி சொல்லி அழைத்ததனாலேயே பஞ்சம் என்னை சுற்றிக்கொண்டது என சிரித்துக்கொண்டே சொல்வார்.
இவர் எழுதிய "சதுர்வேதி" என்னும் நாடகத்தை பிரபல நடிகர் வி.எஸ்.ராகவன் குழுவினருக்கு விற்று விட்டார். (வறுமையினால் தான்!). ஆனால் அதனினும் கொடிது இவரின் இந்த நாடகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது, அதை ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்று இவர் பார்த்தது தான்! (இவர் வீட்டில் தான் டி.வி. இல்லையே!)
ஆனால் அதற்கு கிடைத்த பெரிய பரிசாக இவர் கருதுவது "இதை எழுதியது யார்?" என கேட்டு அவரை வரச்சொல் என்று அழைத்து காஞ்சிப்பெரியவர் ஆசீர்வதித்ததை தான்!
இன்னொரு கலைஞர் : திரு. கே.ஆர்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்!
இந்த படத்தின் நடு நாயகமாக நிற்கிறாரே அவரே தான்!
நாற்பத்தேழுவருஷமாக நடிப்பவர்....முகத்தில் பான்கேக்கும் தலையில் விக்கும் ஏறும்வரை தான் அவர் கிருஷ்ணன் .... அதற்குப்பின் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர்!
ஓரிரு முறை அவரை அவர் அலுவலகத்திலும் பல முறை மேடைகளிலும் அவரை ரசித்திருக்கிறேன்! எளிய, ஆனால் மிகச்சிறந்த மனிதர்!
ஒரு முறை பொதிகை தொலைக்காட்சியில் இரவு செய்தியை ஒன்பது மணிக்கு பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று வெளியான கலைமாமணி விருதிற்கான கலைஞர்களின் பெயர்களை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு சந்தோஷ செய்தி அதில் திரு. கோவை கே.ஆர்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது தான்! அப்போதே அவர் வீட்டிற்கு அழைத்தேன். அவர் தனது மகனை ரெயிலில் அனுப்பி வைக்க ரயில்வே ஸ்டேஷன் சென்றிருப்பதாக சொன்னார் அவர் மனைவி. மறுபடி ஒரு மணிநேரம் கழித்து அவரை அழைத்து என் பாராட்டை தெரிவித்தேன்.
சில நாட்கள் கழித்து அவர் என்னை தொலைபேசியில் அழைத்து ஒரு கூட்டத்திற்கு வரச்சொன்னார்! நானும் போனேன்...சென்ற பின்பு தான் தெரியும் அது அவருக்காக அவர் நண்பர்கள் எடுத்த பாராட்டு கூட்டம் என்று. பல பேர் அவரை பாராட்டினார்கள்.
ஆனால் இந்த பண்பாளர் என்ன செய்தார் தெரியுமா?
எழுந்தார், மைக்கை பிடித்தார். பலர் இங்கே வந்து பாராட்டினீர்கள். சிலர் நான் இந்த செய்தியை போய் சொன்ன பிறகு பாராட்டினீர்கள்.. ஆனால் இதை கேள்விப்பட்ட உடன் என்னை அழைத்து நான் இல்லாததால் பின்பும் என்னை அழைத்து பாராட்டியவரை என்ன செய்யலாம் என்று சொல்லி என்னை பெயர் சொல்லி மேடைக்கு அழைத்து ஊரின் பெரிய மனிதர் ஒருவரை விட்டு எனக்கு பொன்னாடை போர்த்த சொல்லி மகிழ்ந்தார் இந்த மாமனிதர்!
எவ்வளவு பெரிய மனது வேண்டும் என்னை போன்ற ஒரு சிறியோனை, சாதாரணமானவனை கௌரவப்படுத்த!
ஒரு சின்ன செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் கூட "ச்சே!" என்று கூறி நம் முயற்சியை உதறித்தள்ளுகிறோமே. எந்த பெரிய அங்கீகாரத்தையும் எதிர் பார்க்காமல் நாற்பத்தியேழு வருடமாக ஒரு நாடக குழுவை நடத்தி உழைத்து வரும் இந்த கலைஞர்கள் எப்பேர்பட்ட மாமனிதர்கள்!
இவர்கள் இருக்கும் ஊரிலே இருந்து, இவர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்து, இவர்கள் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெற்றதுவே எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம்!
வணங்கி மகிழ்கிறேன் இப்பெரிய மனிதர்களை!
-குருபிரசாத்-

endharo mahaanubaavulu.. anthariki vandhanumu..
ReplyDelete-suresh seenu
..அறியப் படாத கோவையர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்..
ReplyDeleteநல்ல பதிவு குரு..!
எத்தனை எத்தனை சுயநலமில்லாத கலைஞர்கள்!
ReplyDeleteஇதுபோன்ற எண்ணற்ற கலைஞர்களுக்கு நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் தான் செய்ய முடியும்!
பாரதி மணி
மிக்க நன்றி சார்...உங்களை போன்ற கலைஞர்களால் தான் இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும்...உங்களின் கமெண்ட்ஸ் கிடைக்க அடியேன் செய்தது பாக்யம்!
Deletearumai arumai...
ReplyDeleteநன்றி சார்
DeleteNice memories and incidents, interesting reading.
ReplyDeleteநன்றி மேடம்
Deleteஅருமை குரு! உன் எழுத்தில் நல்ல ஆழமும், தெளிவும், ஓட்டமும் இருக்கிறது. இதைத்தான் 'Spontaneous overflow of powerful feelings 'என்று Wordsworth கூறியிருக்கிறார். உன் நல்ல மனதிற்கும், நல்ல பதிவுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அத்தை...
ReplyDelete